Joshua 22:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் கர்த்தருடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu aasaariyanaana eleyaasaarin kumaaranaagiya pinegaas rooban puththiraraiyum kaath puththiraraiyum manaasea puththiraraiyum noakki: neengga'l karththarukku viroathamaay appadikkoththa thuroagaththaich seyyaathirukki'rathinaalea, karththar nammudaiya naduvea irukki'raar enbathai in'ru a'rinthirukki'roam; ippozhuthu israveal puththiraraik karththarin kaikkuth thappuviththeerga'l en'raan.
Tamil OV
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.