Joshua 4:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏறக்குறைய 40,000 பேர் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, யெகோவாவுக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அன்று யுத்த ஆயுதம் தரித்த ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர், யெகோவா முன்பாக யுத்தம் செய்வதற்காக எரிகோவின் சமவெளிக்குக் கடந்துசென்றனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
Tamil Bible Romanised 2017
ea'rakku'raiya naa'rpathinaayirampear yuththasannaththaraay yuththampa'n'numpadi, karththarukku munbaaga erigoavin samanaana ve'liga'lukkuk kadanthupoanaarga'l.
Tamil OV
ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்த சன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏறத்தாழ 40,000 பேர், போருக்குத் தயாராகி, எரிகோவின் சமவெளிக்கு நேராக கர்த்தருக்கு முன்பாக அணியணியாய் சென்றார்கள்.