Judges 18:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது தாண் மக்கள் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு நியமித்துக்கொண்டார்கள்; மனாசேயின் மகனான கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் மகன்களும் அந்தத் தேசம் சிறைப்பட்டுப்போன நாள்வரை, தாண் கோத்திரத்தார்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அங்கே, தாண் மக்கள் விக்கிரகங்களைத் தங்களுக்குத் தெய்வமாக வைத்துக்கொண்டார்கள். மோசேயின் பேரனும், கெர்சோமின் மகனுமான யோனத்தானும் அவனுடைய மகன்களும் நாடு சிறைப்பட்டுப்போன நாள்வரைக்கும், தாண் கோத்திரத்திற்கு பூசாரிகளாக இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது தாண் மக்கள் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு நியமித்துக்கொண்டார்கள்; மனாசேயின் மகனான கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் மகன்களும் அந்தத் தேசம் சிறைப்பட்டுப்போன நாள்வரை, தாண் கோத்திரத்தார்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu thaa'n puththirar anthach suroobaththaith thangga'lukku sthaabiththukko'ndaarga'l; manaaseayin kumaaranaagiya kersoanin magan yoanaththaanum, avan kumaararum anthath theasaththaar si'raippattuppoana naa'lmattum, thaa'n koaththiraththaarukku aasaariyaraayirunthaarga'l.
Tamil OV
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாண் நகரில் தாண் கோத்திரத்தினர் அந்த விக்கிரங்களை வைத்தனர். கெர்சோனின் குமாரனாகிய யோனத்தானை அவர்கள் பூஜை செய்பவனாக நியமித்தனர். கெர்சோம் மோசேயின் குமாரன். இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் வரையிலும் யோனத்தானும், அவனது குமாரர்களும் தாண் கோத்திரத்தினருக்கு பூஜை செய்பவர்களாக விளங்கினர்.