Judges 4:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாபினிடம் தொளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன. அவன் இஸ்ரயேலரை இருபது வருடங்களாக கொடூரமாக ஒடுக்கினான். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுக்குத் தொள்ளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
avanukkuth tho'laayiram iruppurathangga'l irunthathu; avan israveal puththirarai irubathu varusham kodumaiyaay odukkinaan; israveal puththirar karththarai noakki mu'raiyittaarga'l.
Tamil OV
அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சிசெராவிற்கு 900 இரும்பு இரதங்கள் இருந்தன, 20 ஆண்டுகள் அவன் இஸ்ரவேலரைக் கொடுமையாக ஆண்டுவந்தான். எனவே அவர்கள் கர்த்தரிடம் முறையிட்டனர்.