Judges 9:38 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது சேபூல் அவனிடம், “இப்பொழுது நீ பெரிய கதை அளந்தாயே, அது எங்கே? அபிமெலேக் யார்? நாம் ஏன் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று நீ இழிவாகப் பேசிய மனிதர்கள் இவர்களல்லவா. புறப்பட்டுப்போய் அவர்களுடன் சண்டையிடு” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.
Tamil Bible Romanised 2017
atha'rkuch seabool: abimeleakkai naam seavikki'ratha'rku avan yaar en'ru nee sonna un vaay ippozhuthu enggea? nee ninthiththa janangga'l avarga'l allavaa? ippozhuthu nee pu'rappattu, avarga'loadea yuththampa'n'nu en'raan.
Tamil OV
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.