Lamentations 1:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் யெகோவா புறக்கணித்துவிட்டார்; என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். யூதாவின் கன்னிகையை யெகோவா தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
Tamil Bible Romanised 2017
ennilu'l'la baraakkiramasaaliga'laagiya ennudaiyavarga'lellaaraiyum aa'ndavar mithiththuppoattaar; en vaalibarai no'rukkumpadi enakku viroathamaay oru koottaththai varavazhaiththaar; thiraadchappazhaththai aalaiyil mithikki'rathupoala, aa'ndavar yoothaa kumaaraththiyaagiya kannigaiyai mithiththaar.
Tamil OV
என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார். அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர். பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார். என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார். கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.