Lamentations 1:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் அறிவித்த நாளை வரப்பண்ணும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
Tamil Bible Romanised 2017
naan thavikki'rathai avarga'l keattaalum ennaith theat'ruvaar oruvarum illai; en pagaignar ellaarum enakku vantha aabaththaik keattu, theavareer athaich seythapadiyaal santhoashamaayirukki'raarga'l; neer koo'rina naa'lai varappa'n'nuveer, appozhuthu avarga'lum ennaippoalaavaarga'l.
Tamil OV
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை! எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். நீர் இவற்றை எனக்குச் செய்ததால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர். எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர். நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும். நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.