Lamentations 2:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை, நிறைவேற்றிவிட்டார். எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார், பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார். அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
Tamil Bible Romanised 2017
karththar thaam ninaiththathaich seythaar; poorvanaadka'l mutha'rko'ndu thaam katta'laiyitta thamathu vaarththaiyai ni'raiveat'rinaar; avar thappavidaamal nirmoolamaakki, unmeal pagaignan santhoashikkumpadi seythaar; un saththurukka'lin kombai uyarththinaar.
Tamil OV
கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார். அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார். அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை. உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார்.