Lamentations 2:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவருடைய கோபத்தினால் இஸ்ரயேலின் முழு பலத்தையும் இல்லாமல் பண்ணினார். அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். அவர் யாக்கோபின் நாட்டில், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
Tamil Bible Romanised 2017
avar thamathu ukkirakoabaththilea isravealin kombu muzhuvathaiyum vettippoattaar; saththuruvukku munbaaga avar thamathu valathukaraththaip pinnaagath thiruppi, sut'rilum iruppathaip padchikki'ra akkinijuvaalaiyaippoal yaakkoabukku viroathamaaga eriththaar.
Tamil OV
அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜூவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார். அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார். பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார். அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார். அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற நெருப்பைப் போன்று இருந்தார்.