Luke 3:13 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோவான் அவர்களிடம், “வசூலிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்குமேல், எதையும் வசூலிக்கவேண்டாம்” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவன், “சேகரிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்கு மேல் எதையும் சேகரிக்க வேண்டாம்” என்று பதிலளித்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
Tamil Bible Romanised 2017
atha'rku avan: ungga'lukkuk katta'laiyittirukki'ratha'rku athigamaay on'rum vaanggaathirungga'l en'raan.
Tamil OV
அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.