Mark 11:13 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்குச் சென்றார். அவர் அதற்கு அருகில் வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
Tamil Bible Romanised 2017
appozhuthu ilaiga'lu'l'la oru aththimaraththaith thooraththilea ka'ndu, athil eathaagilum agappadumoa en'ru paarkkavanthaar. aththippazhak kaalamaayiraathapadiyaal, avar athinidaththil vanthapoathu athil ilaiga'laiyallaamal, vea'ron'raiyum kaa'navillai.
Tamil OV
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை.