Mark 12:36 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது, தான் பரிசுத்த ஆவியானவராலே பேசுகையில், அறிவித்ததாவது: “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது, “உமது பகைவர்களை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்.” ’
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், “கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம், ‘நான் உமது பகைவர்களை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று சொல்லியிருக்கின்றாரே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
Tamil Bible Romanised 2017
naan ummudaiya saththurukka'lai umakkup paathapadiyaakkip poadumvaraikkum neer ennudaiya valathupaarisaththil udkaarum en'ru karththar en aa'ndavaroadea sonnaar en'ru thaaveethu parisuththa aaviyinaalea solliyirukki'raanea.
Tamil OV
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்: “‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள். நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’