Mark 4:12 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனால், “ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும், கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதனால், “ ‘அவர்கள் எப்போதும் காண்பார்கள், ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் கேட்பார்கள், ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்; இல்லாவிட்டால் அவர்கள் இறைவனிடம் திரும்பி மன்னிப்பைப் பெறுவார்களே’ ” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
Tamil Bible Romanised 2017
avarga'l ku'nappadaathapadikkum, paavangga'l avarga'lukku mannikkappadaathapadikkum, avarga'l ka'ndum kaa'naathavarga'laagavum, keattum u'naraathavarga'laagavum irukkumpadi, ippadich sollappadugi'rathu en'raar.
Tamil OV
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.