Mark 5:23 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவரிடம், “எனது சிறிய மகள் மரணத் தறுவாயில் இருக்கின்றாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் குணமடைந்து பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லி மிகவும் கெஞ்சி மன்றாடிக் கேட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
Tamil Bible Romanised 2017
en kumaaraththi mara'na avasthaippadugi'raa'l, ava'l aaroakkiyam adaiyumpadikku neer vanthu, ava'lmeal umathu kaiga'lai vaiyum, appozhuthu pizhaippaa'l en'ru avarai migavum vea'ndikko'ndaan.
Tamil OV
என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் இயேசுவை மேலும், மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன குமாரத்தி செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான்.