Mark 8:34 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும், தமது சீடர்களையும் அழைத்துச் சொன்னதாவது: “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் தமது சீடர்களையும் தம்மிடம் அழைத்து, “யாராவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து தனது சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
Tamil Bible Romanised 2017
pinbu avar janangga'laiyum thammudaiya seesharga'laiyum thammidaththil azhaiththu: oruvan en pinnea vara virumbinaal, avan thannaiththaan ve'ruththu, than siluvaiyai eduththukko'ndu, ennaip pinpat'rakkadavan.
Tamil OV
பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும்.