Micah 1:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மரேஷாவில் வாழ்கிறவர்களே, உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார். இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள் அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்வரை வருவான்.
Tamil Bible Romanised 2017
mareashaavil kudiyirukki'rava'lea, unakku innum oru suthantharavaa'liyai varappa'n'nuvean; avan isravealin magimaiyaagiya athullaammattum varuvaan.
Tamil OV
மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மரேஷாவில் குடியிருக்கிறவளே, நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன். அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான். அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும்.