Nahum 1:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர்.
Tamil Bible Romanised 2017
karththar erichchalu'l'lavarum neethiyaich sarikkattugi'ravarumaana theavan; karththar neethiyaich sarikkattugi'ravar, ukkirakoabamu'l'lavar; karththar thammudaiya saththurukka'lukkup pirathipalan a'likki'ravar, avar thammudaiya pagaignarukkaagak koabaththai vaiththuvaikki'ravar.
Tamil OV
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார். கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும், மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்! கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார். அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார்.