Nahum 3:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டாள். அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும், அடித்து நொறுக்கப்பட்டார்கள். அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன. அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
aayinum ava'l kudivilakkappattuch si'raiyiruppilea ko'ndupoagappattaa'l; ava'l kuzhanthaiga'l ellaa veethiga'lin muganaiga'lilum moathiyadikkappattaarga'l; ava'ludaiya kanavaanga'lpearil seettup poattaarga'l; ava'ludaiya periyavarga'l ellaarum sanggiliga'laal kattappattaarga'l.
Tamil OV
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள்.