Nehemiah 10:34 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.
Tamil Bible Romanised 2017
niyaayappiramaa'naththil ezhuthiyirukki'rapadiyea engga'l theavanaagiya karththarudaiya balipeedaththinmeal erigi'ratha'rkaaga, ku'rikkappatta kaalangga'lil varushaavarusham engga'l pithaakka'ludaiya kudumbangga'linpadiyea, engga'l theavanudaiya aalayaththukkuk ko'nduvaravea'ndiya vi'ragu kaa'nikkaikkaagavum, aasaariyarukkum, leaviyarukkum, janaththukkum seettuppoattoam.
Tamil OV
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஆசாரியரும் லேவியர்களும் ஜனங்களுமாகிய நாங்கள் சீட்டுப்போட்டோம். ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் நமது தேவனுடைய ஆலயத்திற்கு எந்தக் குடும்பத்தார் விறகை அன்பளிப்பாக கொண்டுவரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு விரும்பினர். நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தில் விறகானது பலிபீடத்தில் எரிக்கப்பட்டது. சட்டத்தில் எழுதப்பட்டபடி நாம் செய்ய வேண்டும்.