Nehemiah 12:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லேவியர்களின் தலைவர்களாகிய அஷபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லேவியர்களின் தலைவர்களாகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
leaviyarin thalaivaraagiya asabiyaavum, serebiyaavum, kathmiyealin kumaaran yesuvaavum, avarga'lukku ethirea ni'rki'ra avarga'l sagoathararum, theavanudaiya manushanaagiya thaaveethinudaiya ka'rpanaiyinpadiyea thuthikkavum thoaththirikkavum, oruvarukkoruvar ethirmugamaaga mu'raimu'raiyaayirunthaarga'l.
Tamil OV
லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் லேவியர்களின் தலைவர்கள். அசபியா, செரெபியா, கத்மியேலின் குமாரனான யெசுவாவும் அவர்களின் சகோதரர்களும், அவர்களின் சகோதரர்கள் துதிப்பாட அவர்களுக்கு முன்னால் நின்று தேவனுக்கு மகிமைச் செலுத்தினார்கள். ஒரு குழு இன்னொரு குழுவிற்குப் பதில் சொன்னது. அதுதான் தேவமனிதனான தாவீதால் கட்டளையிடப்பட்டது.