Nehemiah 12:26 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோத்சதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
yoathsathaakkin kumaaranaagiya yesuvaavin kumaaran yoyakeemin naadka'lilum, athibathiyaagiya negeamiyaavum, veathapaaraganaagiya es'raa ennum aasaariyanum irukki'ra naadka'lilum avarga'l irunthaarga'l.
Tamil OV
யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவ்வாசல் காவலாளர்கள் யொயகீமின் காலத்தில் பணிச்செய்தனர். யொயகீம் யெசுவாவின் குமாரன். யெசுவா யோத்சதாக்கின் குமாரன். அந்த வாசல் காவலர்களும் நெகேமியா ஆளுநராயிருந்த காலத்திலும் ஆசாரியனும், வேதபாரகனுமான எஸ்றாவின் காலத்திலும் பணிச்செய்தனர்.