Nehemiah 12:47 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal serubaabealin naadka'lilum, negeamiyaavin naadka'lilum, isravealar ellaarum paadagarukkum vaasal kaavalaa'larukkum an'raadagath thittamaagiya pangguga'laik koduththaarga'l; avarga'l leaviyarukken'ru pirathishdaipa'n'nik koduththaarga'l; leaviyar aaroanin puththirarukken'ru avarga'l panggaip pirathishdaipa'n'nik koduththaarga'l.
Tamil OV
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.