Nehemiah 13:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஓய்வுநாள் தொடங்குவதற்கு முன்னே, வாசலின்மேல் நிழல்படும்போது, எருசலேமிலுள்ள கதவுகள் பூட்டப்பட்டு, ஓய்வுநாள் முடியும்வரை திறக்கப்படக் கூடாதென நான் உத்தரவு கொடுத்தேன். அத்துடன் ஓய்வுநாளில் எந்தவித வியாபாரத்துக்கான பொருளையும் உள்ளே கொண்டுபோக முடியாதபடி வாசல்களில் என்னுடைய மனிதர்களை நிறுத்தினேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal oayvunaa'lukku munnea erusaleamin patta'navaasalil, maalaimayanggumpoathu, kathavuga'laip poottavum, oayvunaa'l mudiyumattum avaiga'laith thi'ravaathirukkavum vea'ndumen'ru katta'laiyittu, oayvunaa'lilea oru sumaiyum u'l'lea varaathapadikku vaasala'ndaiyilea en vealaikkaararil silarai ni'ruththinean.
Tamil OV
ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.