Nehemiah 13:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது நான் அவர்களை மிகவும் கடிந்துகொண்டு, நீங்கள் மதில் அருகில் இரவு தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்களை கைது செய்வேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்போது நான் அவர்களை எச்சரித்து, “இங்கு வெளியே மதிலின் இரவில் தங்குகிறீர்கள்? இவ்விதமாக இன்னுமொருமுறை செய்தால் நான் உங்களை தண்டிப்பேன் ” என்று கூறினேன். அந்த நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் அந்தப் பக்கமே வரவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது நான் அவர்களை மிகவும் கடிந்துகொண்டு, நீங்கள் மதில் அருகில் இரவு தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைவைப்பேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu naan avarga'laith thidasaadchiyaayk kadinthuko'ndu, neengga'l alanggaththa'ndaiyilea iraaththanggugi'rathu enna? neengga'l ma'rupadiyum ippadich seythaal, ungga'lmeal kaipoaduvean en'ru avarga'loadea sonnean; athumuthal avarga'l oayvunaa'lil varaathirunthaarga'l.
Tamil OV
அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் நான் அந்த வியாபாரிகளையும், விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.