Nehemiah 3:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அருமாப்பின் மகன் யெதாயா தன் வீட்டுக்கு முன்னுள்ள அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்ததாக ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
avarga'l arugea arumaappin kumaaran yethaayaa than veettukku ethiraanathaip pazhuthupaarththuk kattinaan; avan arugea aasaabneyaavin kumaaran aththoos pazhuthupaarththuk kattinaan.
Tamil OV
அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அருமாப்பின் குமாரனான யெதாயா அடுத்த சுவர் பகுதியைக் கட்டினான். யெதாயா தனது சொந்த வீட்டின் அருகிலுள்ளவற்றைப் பழுதுபார்த்து கட்டினான். ஆசாப் நெயாவின் குமாரனான அத்தூஸ் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.