Nehemiah 3:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனூனினாலும், சனோவாகின் குடிகளினாலும் பள்ளத்தாக்கு வாசல் பழுதுபார்க்கப்பட்டது. அவர்கள் அதைத் திரும்பவும் கட்டி, கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடங்களிலே வைத்தார்கள். அத்துடன் குப்பைமேட்டு வாசல்வரை ஆயிரம் அடி சுவரைத் திருத்தி அமைத்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
Tamil Bible Romanised 2017
pa'l'laththaakkin vaasalai aanoonum, saanoavaakin kudiga'lum pazhuthupaarththuk kattinaarga'l; avarga'l athaik katti, atha'rkuk kathavuga'laiyum poottuga'laiyum thaazhppaa'lga'laiyum poattu, kuppaimeattu vaasalmattaaga alanggaththil aayiram muzham kattinaarga'l.
Tamil OV
பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டுவாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனூனும் சானோவாகின் குடிமக்களும் பள்ளத்தாக்கின் வாசலைப் பழுதுபார்த்தனர். அவர்கள் அதனைக் கட்டி அதற்கு கதவுகளை அமைத்தனர். பிறகு அவர்கள் அதற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாளையும் பொருத்தினர். அவர்கள் குப்பைமேட்டு வாசல் வரைக்கும் 500 கெஜம் சுவரைக் கட்டினார்கள்.