Nehemiah 3:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுக்கு அப்பால் அஸ்பூக்கின் மகனும், பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனுமான நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரேயுள்ள வெட்டப்பட்ட குளமும், மாவீரர் மண்டபமும் இருக்கிற இடம்வரையிலும் மதிலின் திருத்த வேலையைச் செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
avanukkup pinnaagap bethsoor maagaa'naththin paathikkup pirabuvaagiya asbookin kumaaran negeamiyaa thaaveethin kalla'raiga'lukku ethiraana idamattaagavum, vettappatta ku'lamattaagavum, baraakkiramasaaliga'lin veedumattaagavum irukki'rathaip pazhuthupaarththuk kattinaan.
Tamil OV
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அஸ்பூகின் குமாரனான நெகேமியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். இந்த நெகேமியா பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். இவன் தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரையும் பழுதுபார்த்தான். அதோடு வெட்டப்பட்ட குளம் வரையிலும், பராக்கிரமசாலிகளின் வீடுவரையிலும் உள்ளவற்றைப் பழுதுபார்த்தான்.