Nehemiah 3:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுக்கு அடுத்தாக அந்த மூலையிலிருந்து பிரதான ஆசாரியன் எலியாசீபின் வீட்டு வாசல்வரையுள்ள மற்றுமொரு பகுதியை சபாயின் மகனான பாரூக் ஆர்வத்துடன் பழுதுபார்த்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
avanukkup pinnaagach saabaayin kumaaran baarook anthak koadi thuvakkip pirathaana aasaariyanaagiya eliyaaseebin vaasa'rpadimattum irukki'ra pinnoru panggai vegu jaakkirathaiyoadea pazhuthupaarththuk kattinaan.
Tamil OV
அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாபாயின் குமாரனான பாரூக் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். பாரூக் மிகக் கடினமாக வேலை செய்தான். அவன் அந்த மூலையிலிருந்து தலைமை ஆசாரியனான எலியாசீபின் வீட்டின் நுழைவாயில் வரை சுவரைக் கட்டினான்.