Nehemiah 3:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஊசாயின் மகன் பாலால் வளைவிற்கு எதிரேயும், காவலரின் முற்றத்திற்கு அருகேயுள்ள உயர்ந்திருக்கும் அரண்மனையிலிருந்து வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் உள்ள திருத்த வேலையைச் செய்தான். அவனுக்கு பின்பு பாரோஷின் மகன் பெதாயாவும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
Tamil Bible Romanised 2017
oosaayin kumaaran paalaal va'laivukku ethireayum, kaaval veettin mut'raththukkaduththa raajaavin uyaramaana aramanaikku ve'lippu'ramaayirukki'ra kommaikku ethireayum irukki'rathaik kattinaan; avanukkup pinnaagap paaroashin kumaaran pethaayaavum,
Tamil OV
ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஊசாயின் குமாரனான பாலால் வளைவுக்கு எதிரேயும் கோபுரத்திற்கு அருகேயும் உள்ளவற்றைக் கட்டினான். இந்த கோபுரம் ராஜாவின் உயரமான அரண்மனையில் இருந்தது. அது ராஜாவின் காவல் வீட்டின் முற்றத்தை அடுத்திருந்தது. பாலாலுக்கு அடுத்து (பிறகு) பாரோஷின் குமாரன் பெதாயா வேலைச் செய்தான்.