Nehemiah 3:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுக்கு அடுத்ததாக செலேமியாவின் மகன் அனனியாவும், சாலாப்பின் ஆறாவது மகனான ஆனூனும் இன்னொரு பகுதியைத் திருத்திக் கட்டினார்கள். அவர்களுக்கு அடுத்ததாக பெரகியாவின் மகன் மெசுல்லாம் தனது இருப்பிடத்தின் எதிரே திருத்திக் கட்டினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
avanukkup pinnaagach selmeeyaavin kumaaran ananiyaavum, saalaapin aa'raavathu kumaaranaagiya aanoonum, vea'roru panggaip pazhuthupaarththuk kattinaarga'l; avarga'lukkup pinnaagap berakiyaavin kumaaran mesullaam, than a'raiveettukku ethirea irukki'rathaip pazhuthupaarththuk kattinaan.
Tamil OV
அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செல்மீயாவின் குமாரனான அனனியாவும் சாலாபின் குமாரனான ஆனூனும் வேறொரு பங்கைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். (ஆனூன், சாலாபின் ஆறாவது குமாரன்) பெரக்கியாவின் குமாரன் மெசுல்லாம் அவனது வீட்டின் முன்னால் ஒரு பகுதியை கட்டினான்.