Nehemiah 3:31 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுக்கு அடுத்து பொற்கொல்லரில் ஒருவனான மல்கியா, ஆய்வு வாசலுக்கு எதிரேயுள்ள ஆலய பணியாட்கள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் வரைக்கும் மூலைக்கு மேலுள்ள அறையின் பகுதியையும் திருத்திக் கட்டினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
avanukkup pinnaagath thattaanin kumaaran malkiyaa mipkaath ennum vaasalukku ethirea nithaneemiyarum ma'ligaikkaararum kudiyirukki'ra sthalamuthal koadiyin mealveedumattaagavum irukki'rathaip pazhuthupaarththuk kattinaan.
Tamil OV
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மல்கியா, ஆலய வேலைக்காரர்களும் வணிகர்களும் குடியிருப்புகள் வரையுள்ள அடுத்த பாகத்தை பழுதுபார்த்தான். அது சோதனை வாசலுக்கு எதிரேயுள்ளது. மல்கியா, பொற்கொல்லனாய் இருந்தான்.