Nehemiah 3:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அடுத்துள்ள பகுதி தெக்கோவா மனிதர்களால் பழுதுபார்க்கப்பட்டது; ஆனால் அவர்களுடைய உயர்குடி மக்கள் அவர்களுடைய மேற்பார்வையாளர்களின்கீழ் வேலைசெய்ய தோள்கொடுத்து உதவவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய கழுத்தைக் கொடுக்கவில்லை.
Tamil Bible Romanised 2017
avarga'l arugea thekkoavaa ooraar pazhuthupaarththuk kattinaarga'l; avarga'ludaiya pirabukka'loa, thangga'l aa'ndavarudaiya vealaikkuth thangga'l kazhuththaik kodukkavillai.
Tamil OV
அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தெக்கோவா ஊரார் அவர்கள் அருகே பழுதுபார்த்து கட்டினார்கள். ஆனால் அவர்களது தலைவர்களோ அவர்களின் ஆளுநரான நெகேமியாவிற்கு வேலை செய்ய மறுத்துவிட்டனர்.