Nehemiah 3:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பழைய வாசல், பாசெயாவின் மகன் யோய்தாவினாலும், பேசோதியாவின் மகன் மெசுல்லாமினாலும் திருத்தியமைக்கப்பட்டது. அவர்கள் அதன் மரத்தாலான உத்திரங்களை அமைத்து, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
pazhaiya vaasalaip paseyaakin kumaaranaagiya yoaythaavum, beasoathiyaavin kumaaranaagiya mesullaamum pazhuthupaarththuk kattinaarga'l; avarga'l atha'rku uththarampaavi, atha'rkuk kathavuga'laiyum poottuga'laiyum thaazhppaa'lga'laiyum poattaarga'l.
Tamil OV
பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோய்தாவும் மெசுல்லாமும் பழைய வாசலை பழுதுபார்த்து கட்டினார்கள். யோய்தா, பசெயாகின் குமாரன். மெசுல்லாம், பேசோதியாவின் குமாரன். அவர்கள் அதற்கு தூண்கள் அமைத்தனர். அவர்கள் கதவுகளையும் அதற்குரிய பூட்டுகள் மற்றும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்கள்.