Nehemiah 3:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அத்துடன் அவர்களுக்கு அடுத்ததாக கிபியோன், மிஸ்பா ஊர்களின் மனிதர்களால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. இவர்களுடன் கிபியோனைச் சேர்ந்த மெலெத்தியாவும், மெரொனோத்தியனான யாதோனும் இருந்தார்கள். இவ்விடங்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் ஆளுநரின்கீழ் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l arugea kibiyoan mispaa oorga'lin manusharaana melatheeyaa ennum kibiyoaniyanum, yaathoan ennum meronoaththiyanum, nathikku ippu'raththilirukki'ra athibathiyin samasthaanamattum pazhuthupaarththuk kattinaarga'l.
Tamil OV
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கிபியோன் மற்றும் மிஸ்பா ஊர்களின் மனிதர்கள் அடுத்த பகுதியைப் பழுதுபார்த்து கட்டினார்கள். அந்த வேலையை மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும் செய்தனர். மிஸ்பா மற்றும் கிபியோன் ஐபிராத்து நதியிடையே மேற்கு பகுதியின் ஆளுநரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.