Nehemiah 3:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அடுத்துள்ள பகுதியை பொற்கொல்லர்களில் ஒருவனான அர்காயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தான்; அவனைத் தொடர்ந்து நறுமண தைலம் செய்பவர்களுள் ஒருவனான அனனியா திருத்த வேலைகளைச் செய்தான்; இவர்கள் எருசலேமின் அகலமான மதில்வரைக்கும் எருசலேமைப் புதுபித்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
Tamil Bible Romanised 2017
avarga'l arugea thattaaril oruvanaagiya araayaavin kumaaran oosiyeal pazhuthupaarththuk kattinaan; avan arugea thailakkaararil oruvan kumaaranaagiya ananiyaa pazhuthupaarththuk kattinaan; athumutha'rko'ndu agalamaana mathilmattum erusaleam idikkaamal vittirunthathu.
Tamil OV
அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அராயாவின் குமாரனான ஊசியேல் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். ஊசியேல் ஒரு பொற்கொல்லனாய் இருந்தான். தைலக்காரர்களில் ஒருவரான அனனியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். அம்மனிதர்கள் அந்த அகன்ற மதில்வரைக்கும் எருசலேமைக் கட்டிப் பழுதுபார்த்தனர்.