Nehemiah 9:35 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயவிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் தீயசெயல்களைவிட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீர் அவர்களுக்குக் கொடுத்த விசாலமும் செழிப்புமான நாட்டில், மிகுதியான நன்மைகளை அனுபவித்து, தங்கள் அரசில் இருந்தபோதுங்கூட அவர்கள் உமக்குப் பணிவிடை செய்யவில்லை; தங்கள் தீமையான வழிகளைவிட்டு விலகவுமில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயவிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் தீயசெயல்களைவிட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l thangga'l raajyaththilum, neer avarga'lukkuk koduththa ummudaiya periya thayaiyilum, neer avarga'lukku munbaagath thi'ranthuvaiththa visaalamum sezhippumaana theasaththilum umakku oozhiyagnseyyaamalum, thangga'l thurkkarumangga'lai vittuth thirumbaamalum poanaarga'l.
Tamil OV
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எங்கள் முற்பிதாக்கள் உமக்குப் பணி செய்யவில்லை. அவர்கள் தம் சொந்த இராஜ்யத்தில் இருந்தும் செய்யவில்லை. அவர்கள் தீமை செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் நீர் செய்த அனைத்து அற்புதங்களையும் அனுபவித்தனர். அவர்கள் வளமான நிலங்களை அனுபவித்தனர். அவர்கள் ஏராளமான இடத்தைப் பெற்றனர். ஆனால் அவர்கள் தம் தீச்செயல்களை நிறுத்தவில்லை.