Numbers 33:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எகிப்தியர்களோ தங்களுக்குள்ளே யெகோவா சாகடித்த முதற்பேறானவர்களையெல்லாம் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், யெகோவா அவர்களுடைய தெய்வங்களின்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்திருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது எகிப்தியர்கள் கர்த்தர் தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
Tamil Bible Romanised 2017
appozhuthu egipthiyar karththar thangga'lukku'l'lea sanggariththa thalaichchanpi'l'laiga'laiyellaam adakkampa'n'ninaarga'l; avarga'l theavarga'linpearilum karththar neethiseluththinaar.
Tamil OV
அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின் பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.