Numbers 9:23 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாமிட்டார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டார்கள். யெகோவா மோசேயின் வழியாகக் கொடுத்த கட்டளைப்படியே அவர்கள் அவருடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
Tamil Bible Romanised 2017
karththarudaiya katta'laiyinpadiyea paa'layami'rangguvaarga'l; karththarudaiya katta'laiyinpadiyea pirayaa'nampa'n'nuvaarga'l; karththar moaseayaikko'ndu katta'laiyidugi'rapadiyea karththarudaiya kaavalaik kaaththukko'lvaarga'l.
Tamil OV
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.