Psalms 106:47 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எங்கள் தேவனாகிய யெகோவாவே, நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும், பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
Tamil Bible Romanised 2017
engga'l theavanaagiya karththaavea, naangga'l umathu parisuththa naamaththaippoat'ri, ummaith thuthikki'rathil meanmaipaaraattumpadi engga'lai iradchiththu, engga'lai jaathiga'lilirunthu searththaru'lum.
Tamil OV
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்! தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார். எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம், எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.