Psalms 13:3 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
Tamil Bible Romanised 2017
en theavanaagiya karththaavea, neer noakkippaarththu, enakkuch sevikoduththaru'lum; naan mara'naniththirai adaiyaathapadikku en ka'nga'laith the'livaakkum.
Tamil OV
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! இல்லையெனில் நான் மடிவேன்.