Psalms 17:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்; கொடியவர்களிடமிருந்து உமது வாளினால் என்னைத் தப்புவியும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
Tamil Bible Romanised 2017
karththaavea, neer ezhunthirunthu, avanukku ethirittu, avanai madanggadiyum; karththaavea, en aaththumaavaith thunmaarkkanudaiya kaikku ummudaiya pattayaththinaal thappuviyum.
Tamil OV
கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும். உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.