Psalms 28:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீதின் பாடல் என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Tamil Bible Romanised 2017
en kanmalaiyaagiya karththaavea, ummai noakkik kooppidugi'rean; neer kea'laathavarpoala mavunamaayiraatheayum; neer mavunamaayirunthaal naan kuzhiyil i'ranggugi'ravarga'lukku oppaavean.
Tamil OV
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.