Psalms 39:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
Tamil Bible Romanised 2017
ithoa, en naadka'lai naalu vira'rkadaiya'lavaakkineer; en aayusu umathu paarvaikku illaathathupoalirukki'rathu; entha manushanum maayaiyea enbathu nichchayam. (sealaa.)
Tamil OV
இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர். என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல. ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது. ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!