Psalms 57:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. பேரழிவு கடந்து செல்லுமளவும், நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
Tamil Bible Romanised 2017
enakku iranggum, theavanea, enakku iranggum; ummai en aaththumaa a'ndikko'l'lugi'rathu; vikkinangga'l kadanthupoagumattum umathu settaiga'lin nizhalilea vanthu adaivean.
Tamil OV
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில், பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.