Revelation 11:17 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் சொன்னதாவது: “இருக்கிறவரும் இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக்கொண்டு ஆளுகை செய்யத் தொடங்கிவிட்டீர்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர்கள் சொன்னதாவது: “இருக்கின்றவரும், இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக் கொண்டவராய் ஆளுகை செய்யத் தொடங்கி விட்டீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
Tamil Bible Romanised 2017
irukki'ravarum irunthavarum varugi'ravarumaagiya sarvavallamaiyu'l'la karththaraagiya theavanea, ummai sthoaththirikki'roam; theavareer umathu mahaa vallamaiyaikko'ndu raajyabaarampa'n'nugi'reer.
Tamil OV
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்த மூப்பர்கள், “சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர். உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.