Revelation 11:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஜனங்கள் கோபங்கொண்டார்கள், உம்முடைய கோபமும் வந்துவிட்டது. இறந்தவர்களை நியாயந்தீர்க்கும் வேளை வந்துவிட்டது, உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும், உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கிற சிறியோர் பெரியோர் யாவருக்கும், வெகுமதி கொடுக்கும் வேளையும் வந்துவிட்டது. பூமியை அழிக்கிறவர்களை, அழிக்கும் வேளையும் வந்துவிட்டது.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மக்கள் இனத்தார் சினம் கொண்டனர், உம்முடைய உக்கிர கோபம் வெளிப்பட்டது. இறந்தவர்களை நியாயம் தீர்ப்பதற்கான வேளை வந்துவிட்டது. உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும், உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கின்ற சிறியோர், பெரியோர் யாவருக்கும் வெகுமதி கொடுப்பதற்கான வேளையும் வந்துவிட்டது. பூமியை அழிக்கின்றவர்களை அழிப்பதற்கான வேளையும் வந்துவிட்டது.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Tamil Bible Romanised 2017
jaathiga'l koabiththaarga'l, appozhuthu ummudaiya koabam moo'ndathu; mariththoar niyaayaththeerppadaigi'ratha'rkum, theerkkatharisiga'laagiya ummudaiya oozhiyakkaararukkum parisuththavaanga'lukkum umathu naamaththinmeal bayabakthiyaayiruntha si'riyoar periyoarukkum palana'likki'ratha'rkum, boomiyaik keduththavarga'laik kedukki'ratha'rkum, kaalam vanthathu en'ru solli, theavanaith thozhuthuko'ndaarga'l.
Tamil OV
ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர். ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம். இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம். உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம். சிறியோராயினும் பெரியோராயினும் சரி, உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம். உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.