Revelation 12:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணின்மேல் கடுங்கோபங்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கிற மீதியான அவளது பிள்ளைகளுக்கு எதிராக யுத்தம் செய்யும்படி போனது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது அந்த இராட்சதப் பாம்பு அந்தப் பெண்ணின் மேல் கடுங்கோபம்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.
Tamil Bible Romanised 2017
appozhuthu valusarppamaanathu sthireeyinmeal koabangko'ndu, theavanudaiya ka'rpanaiga'laik kaikko'l'lugi'ravarga'lum, iyeasuki'risthuvaikku'riththuch saadchiyai udaiyavarga'lumaagiya ava'ludaiya santhathiyaana mat'ravarga'ludanea yuththampa'n'nappoayit'ru.
Tamil OV
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்னும் அப்பாம்புக்கு அப்பெண்ணின்மீது மிகுந்த கோபம் இருந்தது. அவளது மற்ற பிள்ளைகளோடு போரிட அப்பாம்பு புறப்பட்டுப் போயிற்று. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களும், இயேசு போதித்த உண்மையைக் கொண்டிருப்பவர்களுமே அவளுடைய மற்ற பிள்ளைகள் ஆவார்கள்.