Revelation 22:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“வாழ்வு தரும் மரத்தின் பழத்தை உண்ணும் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும் வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் தங்கள் உடைகளைக் கழுவி தூய்மைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Tamil Bible Romanised 2017
jeevavirudchaththinmeal athigaaramu'l'lavarga'laavatha'rkum, vaasalga'l vazhiyaay nagaraththi'rku'l piraveasippatha'rkum avarudaiya ka'rpanaiga'linpadi seygi'ravarga'l baakkiyavaanga'l.
Tamil OV
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும்.