Revelation 8:7 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முதலாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது கல்மழையும், இரத்தம் கலந்திருந்த நெருப்பும் வந்தன. அது பூமியின்மேல் வீசியெறியப்பட்டது. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்துபோயிற்று, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்துபோயின, பச்சையான புல் எல்லாமே எரிந்துபோயிற்று.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
முதலாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது, இரத்தம் கலந்த ஆலங்கட்டியும் நெருப்பும் தோன்ற, அவை பூமியின் மேல் வீசப்பட்டன. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போனது, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்து போனது, பசுமையான புற்கள் அனைத்துமே எரிந்து போயின.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.
Tamil Bible Romanised 2017
muthalaam thoothan ekkaa'lam oothinaan; appozhuthu iraththangkalantha kalmazhaiyum akkiniyum u'ndaagi, boomiyilea kottappattathu; athinaal marangga'lil moon'rilorupanggu venthupoayit'ru, pasumpullellaam erinthupoayit'ru.
Tamil OV
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முதல் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி பூமியிலே விழுந்தன. இதனால் மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் எரிந்துபோயின. பசும்புற்களெல்லாம் கரிந்து போயின.