Romans 10:21 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், அவன் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி, நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
isravealaraikku'riththoa: keezhppadiyaathavarga'lum ethirththup peasugi'ravarga'lumaayirukki'ra janangga'lidaththi'rku naa'lmuzhuthum en kaiga'lai neettinean en'ru avan solliyirukki'raan.
Tamil OV
இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவ்வளவு நாட்களும் “நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள். என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்.” என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.